இழந்த நாட்கள்!

 

இழந்த நாட்கள்!

நினைவில் பதிந்த முதல் குழந்தை,
அம்மா பெற்றெடுத்த என் தங்கை,
அப்பாவின் செல்ல மகள்.
அண்ணனும் நானும்
கொஞ்சிக் குலாவிய எங்கள் தங்கை.

ஏழு வயதுக் குழந்தையாய்
விட்டுச் சென்றேன் படிப்புக்காக —
ஆகிவிட்டேன் அவளுக்கு
விருந்தாளியாக.

இழந்ததைத் திரும்பப் பெறும்
வரம் கிடைத்தால்,
கேட்பேன் —
இழந்த நாட்களை!

அண்ணனாக மீண்டும்
அவளோடு சேர்ந்து வளர்ந்திடும்
வாய்ப்புக்காக.

என் மனம் அறிந்துதானோ
கட்டிக் கொண்டாள் 
மாமன் மகனை?

“வாடா மச்சான்”
என்று அழைக்கும்
அந்த நெருக்கம் தொடர.

இறைவனும் அறிந்து கொண்டானோ?

பெற்றெடுத்தேன்
என் செல்லப் புதல்வியை.

இனி கவலை இல்லை —
தந்தையாகவும்,
தமையனாகவும்,
சேர்ந்தே வாழ்ந்திடுவேன்!

Comments

Popular posts from this blog

SINGLE TICK ✓ - A Mystery Chat

நானாகிப் போன நீ!

Alive is Awesome!