ராம பரதன்
முதியவரின் குரல்... முன்னுரை: காப்பியங்களும், இலக்கியங்களும் நமக்கு பல வாழ்க்கை நெறிகளையும், முன் உதாரணங்களையும் சொல்லித் தந்துள்ளன. இத்தகைய நெறிகளும், உதாரணங்களும் எக் கா லத்திற்கும் பொருந்தும். அப்படிப் பட்ட ஒரு கதையை தான் நாம் இன்று அலச இருக்கின்றோம். பொதுவாக அண்ணன் தம்பி பாசம் என்றால் ராம-லக்ஷ்மணன் என்று கூறுவார்கள். இக் கதையிலும் ஒரு அண்ணன் தம்பியை பற்றி சற்றே வித்தியாசமான கோணத்தில் பார்ப் போம். வாசகர்களே, ஒரு அழகான கதைக்கு தயாரா? வாருங்கள் பயணிப்போம்... கதை: ராம பரதன் சகோதரர்கள் ராம்-பரத், என்றால் தெப்பூர் - அண்ணாநகர் ஏரியாவில் பிரபலம். அண்ணாநகர் கூடை பந்துக் குழுவில் முக்கிய விளையாட்டு வீரர்கள். அண்ணன் ராம் மிகவும் பொறுமைசாலி. எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்பவன். நேர்த்தியாக விளையாடக் கூடியவன், அந்தக் குழுவின் மிகப் பெரிய பலம மற்றும் அணித் தலைவன். தம்பி பரத் மிகவும் சுட்டி, யாரிடமும் மிக சுலபமாக பழகி விடுவான். விளையாட்டில் இவன் ஒரு குழு ஆட்டக்காரன் (team player). சரியாக குறி பார்த்து எரியத் தெரியாது என்றாலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பந்தை யாரிடம்...