இப்படை தோற்கின்?
நம்ம கோபியும் அவனோட ஏழு நண்பர்களும் தான் அந்த எட்டு பேர் படை. எட்டாவது வரைக்கும் இவங்க எட்டு பேரும் ஒன்னாத் தாங்க படிச்சாங்க. முதல் வகுப்புல இருந்து எட்டாவது வரைக்கும் இவங்கதான் முதல் எட்டு ரேங்க் எடுப்பாங்க. வேற யாரையும் நுழைய விட மாட்டாங்க. அவ்வளவு நல்லா படிப்பாங்க. இவங்களோட எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ராஜரத்தினம் என்ன சொல்றாருன்னு கேட்போம். “பசங்களா, இந்த எட்டு பேரையும் பார்த்து நீங்க நிறைய கத்துக்கனும். இவங்க இலக்கை அடயனும்ன்னு வெறியோட ஓடறாங்க. சரியான பாதைல போய்க்கிட்டு இருக்குற இவங்களுக்கு கண்டிப்பா வெற்றி நிச்சயம். நான் இன்னைக்கு சொல்றேன், எழுதி வெச்சுக்கோங்க இந்த எட்டு பேரும் மிக உயர்ந்த இடத்தை அடைவாங்க! ” ன்னு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு மத்த பசங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதை கேட்டுட்டு நம்ம நண்பர்கள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர பார்த்து பெருமை பட்டுக்கிட்டாங்க. மத்த பசங்க எல்லாம் ஆச்சர்யமாவும், ஏக்கத்தோடயும் அவங்கள பார்த்தாங்க. அதுல மூணாவது வரிசையில உட்கார்ந்திருந்த மைனர் மகன் மணி, வாயில ஈ போறது கூட தெரியாம ஆ-ன்னு பார்த்துக்கிட்டு இருந்தான். நல்லபடியா எட்டாவத...