Posts

Showing posts from 2011

சித்திரையில், நான்!

“அனைத்தும் மாறிவிடும் மணம் முடிந்த பிறகு ” , சொன்னார்கள் நண்பர்களும், உறவினர்களும், “நடக்கக் கூடும்?! ” நினைத்துக் கொண்டேன், 3 ஆண்டுகள் கடந்து போயின, எதுவும் மாறவில்லை. “ஏன்? ” எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஆர்வம அதிகரித்தது, “ஏன் அப்படிச் சொன்னார்கள்? ” என நினைத்து. “நான் வழக்கத்துக்கு மாறு பட்டவனா? ” யோசிக்கத் துவங்கி விட்டேன்! இதோ பதில் கிடைத்து விட்டது, அந்த விஷயம் அறிந்த மூன்றே மாதத்தில், நிறையவே மாறிவிட்டேன், ஒவ்வொரு கணமும், மாற்றிக் கொண்டே இருக்கிறேன், என்னை மேம்படுத்திக் கொள்ள, கண்டிப்பாக முற்றிலும் மாறுபட்டவனாகி இருப்பேன், வரும் சித்திரை மாதம் முதல் முறையாக,  எங்கள் குழந்தை,  இவ்வுலகை காணும் போது! ~ மதன் தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். ~குறள்

இப்படை தோற்கின்?

நம்ம கோபியும் அவனோட ஏழு நண்பர்களும் தான் அந்த எட்டு பேர் படை. எட்டாவது வரைக்கும் இவங்க எட்டு பேரும் ஒன்னாத் தாங்க படிச்சாங்க. முதல் வகுப்புல இருந்து எட்டாவது வரைக்கும் இவங்கதான் முதல் எட்டு ரேங்க் எடுப்பாங்க. வேற யாரையும் நுழைய விட மாட்டாங்க. அவ்வளவு நல்லா படிப்பாங்க. இவங்களோட எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ராஜரத்தினம் என்ன சொல்றாருன்னு கேட்போம். “பசங்களா, இந்த எட்டு பேரையும் பார்த்து நீங்க நிறைய கத்துக்கனும். இவங்க இலக்கை அடயனும்ன்னு வெறியோட ஓடறாங்க. சரியான பாதைல போய்க்கிட்டு இருக்குற இவங்களுக்கு கண்டிப்பா வெற்றி நிச்சயம். நான் இன்னைக்கு சொல்றேன், எழுதி வெச்சுக்கோங்க இந்த எட்டு பேரும் மிக உயர்ந்த இடத்தை அடைவாங்க! ” ன்னு  ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு மத்த பசங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதை கேட்டுட்டு நம்ம நண்பர்கள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர பார்த்து பெருமை பட்டுக்கிட்டாங்க. மத்த பசங்க எல்லாம் ஆச்சர்யமாவும், ஏக்கத்தோடயும் அவங்கள பார்த்தாங்க. அதுல மூணாவது வரிசையில உட்கார்ந்திருந்த மைனர் மகன் மணி, வாயில ஈ போறது கூட தெரியாம ஆ-ன்னு பார்த்துக்கிட்டு இருந்தான். நல்லபடியா எட்டாவத...

பென்சில் கவிதை

Image
நெஞ்சில் வரும் கற்பனையை இப் பென்சில் கொண்டு  நிரப்பி விடவே துவங்கினேன் எண்ணமெல்லாம் ஈடேறி, என் கண்ணெதிரே நீ! பென்சில் கவிதை 

மழை!!!

Image
ஊரெல்லாம் ஒரே பஞ்சம்  கரு மேகங்கள் கருணையே இன்றி விலகிச் சென்றது பல ஆண்டுகள் கடந்து போயின இதோ வந்து விட்டது நேற்று பெய்த மழையால் ஊரெல்லாம் ஒரே வெள்ளம் இது போதும், காத்துக் கொள்வோம் இனி சில ஆண்டுகளுக்கு பஞ்சம் இல்லை அம்மா, ஒரு நாள் மழையாக இந்த சில நாட்களுக்கு நன்றி! ~மதன் பதிமூன்று ஆண்டுகளில் முதல் முறையாக என் அம்மா, என்னோடு வந்து சில நாட்கள் தங்கியதை நினைவு கூறி, நன்றி பாராட்டும் கவிதை.

பிஞ்சில் நஞ்சு

' யாருப்பா இது ?' வீட்டுக்கு புதிதாக வந்திருக்கும் சிறுவனைப் பார்த்து அப்பாவிடம் கேட்டான் சிறுவன் ராமு. ' ராமு இவன்தான் குமார். இன்னைல இருந்து   நம்ம மண்டில பொட்டலம் போட வந்திருக்கான். ' என மகனுக்கு   அறிமுகம் செய்து வைத்தான் வெங்கடேசன்.   மிஞ்சிப் போனா ராமுவை விட 2 வயது அதிகமாக இருக்கும் அந்த சிறுவனுக்கு. நேற்று தான் ராமுவின் பத்தாவது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது.   ராமுவைப் பார்த்து வெள்ளந்தியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் அந்த அரை நிஜார் போட்டிருந்த சிறுவன் குமார். ராமுவும் பதிலுக்கு புன்னகைத்தான்.   ' யாரு இந்தப் பையன் புதுசா இருக்கான். நம்ம தெருவுல பார்த்ததில்லையே ?' கேட்டுக் கொண்டே பூஜை அறையில் இருந்து வெளியே வந்த பாட்டியிடம் , ' பாட்டி , இவன் பேரு குமார். நம்ம மண்டில வேலை செய்ய வந்திருக்கான். '   வேகமாக அவனுக்கு தெரிந்ததை சொன்னான். பாட்டி வெங்கடேசனை பார்க்க , ' நம்ம நெத்திலி   தர்மலிங்கம் இருக்காரு இல்ல , அவரோட பேரன் மா. இவனோட அப்பன் வந்து இவனுக்கு வேலை ஏதாவது இருந்தா போட்டுக் கொடுக்க சொன்னான். ' அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே. '...

மனப் படிப்பி

இரண்டு வருட  முயற்சி  ஒரு வழியாக அந்தக் கருவியை உருவாக்கிவிட்டான் விஞ்ஞானி மோகன். ' மனப் படிப்பி ' அதுதான் அந்தக் கருவியின் பெயர். அதிகாலை நேரம் , உறக்கம் தெளிந்தும் தெளியாத தருணம் , கனவுலகும் நிஜ உலகும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கும் தருணம். அந்த நேரத்தில் தான் உள்ளத்தில் உள்ள அனைத்து எண்ணங்களும் திமிறி கனவுலகை வதம் செய்துக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இந்தக் கருவியில் இருந்து வரும் அலைகளை ஒருவரின் மூளையில் இருந்து வரும் அலைகளுடன் இணைத்து விட்டால் போதும். அது அவர் மனதில் உள்ளதை படித்து எழுத்து வடிவில் குடுத்துவிடும்.   அந்தக் கருவியை பரிசோதிக்க நினைத்தான். அதற்க்கான சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்தான். அன்று   அதிகாலை 5:30 மணி , அலாரம் அடித்தது.மோகன் வேகமாக எழுந்து அலாரத்தை நிறுத்தினான். மாலுவின் தூக்கமும் லேசாக கலைந்தது. அவள் தூக்கத்தை மேலும் கலைக்காமல் , மெதுவாக மனப் படிப்பியை உயிர்ப்பித்தான். கருவியை மாலுவின் மூளையோடு இணைத்தான். திரையில் ஒவ்வொரு எழுத்துக்களாக காட்டத் துவங்கியது. ' நாளை , கல்யாணத்திற்கு பின் வருகிற என் மூன்றாம் பிறந்த நாள். இந்த வ...