Posts

Showing posts from 2024

நானாகிப் போன நீ!

உனக்கு பிடித்த...  இல்லை, எனக்கு பிடித்த...  இல்லை இல்லை, நானாகிப் போன எனக்கு பிடித்த நீ  நீ நீயாக இருப்பது   என்னை நானாக ஏற்றுக்கொண்டது  நாம் வார்த்தைகளில் பேசிக் கொண்டதை விட   மனதில் பரிமாறிக்கொண்ட தருணங்களே அதிகம்   எதிர்ப்பார்ப்புகளும்  ஏமாற்றங்களும் இருந்திராமல் இல்லை இப்பூவுலகில், ஊடலும் காதலின் ஒரு அங்கமே   யுக யுகங்களாக தேடித் திரிந்த இரு ஆன்மாக்களின் சங்கமம் இது!   நீயும் நானும் என்ன செய்து விட முடியும்   இந்தப் பிறப்பில் அவைகள் புண் பட்டு விடாமல்   பார்த்துக் கொள்வதைத் தவிர   இதனால என்ன சொல்ல வரேன்னா   நீ யாருன்னு எனக்கு தெரியும்  நான் யாருன்னு உனக்கு தெரியும்   இப்ப எதுக்கு இந்த formalities

என் பாடல்!

 நான் வாசித்ததிலேயே இனிமையான கவிதை ' சுஹாசினி' நீயே கவிதையாகி விட்டதனால், உன் பெயரை  சொல்லும் போதெல்லாம் பாடகனாகிறேன்  கற்றுத் தேர்ந்த பாடகர்கள் கோபித்து க்  கொள்வார்கள் என, நான் அவ்வப்போது  பாடுவதை குறைத்துக் கொள்கிறேன்   பாடினாலும், பாடாவிட்டாலும் நித்தமும்  என் மனதில் ஒலிக்கும், என்னுள்  கலந்திட்ட பாடலடி நீ!